சபாஷ் மு.க.ஸ்டாலின்... நாலாபுறமும் பாராட்டுக்கள்... இப்படியே தொடருமா..?

By Thiraviaraj RMFirst Published May 11, 2021, 11:24 AM IST
Highlights

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தொடங்கி சட்டமன்ற உறுப்பினராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டார் மாண்புமிகு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 
 

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தொடங்கி சட்டமன்ற உறுப்பினராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டார் மாண்புமிகு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நிகழும். ரவுடிகள் திமிறெடுப்பார்கள், குறுநில மன்னர்கள் உருவெடுப்பார்கள் என்ற பேச்சுக்கள் உலவி வந்தன. அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் தேர்ந்தெடுத்த அதிகாரிகள், அவர் எடுக்கும் முன்னெடுப்புகள், இடும் கட்டளைகள்  என ஒவ்வொன்றும் அப்ளாஸ் போட வைகின்றன. சுகாதரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணனை மாற்றாதது குறித்து உயர்நீதிமன்றம் ஸ்டாலின் ஆட்சியை பாராட்டி வருகிறது.  

இந்நிலையில், அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் திமுக கட்சிப் பிரச்னைக்காக காவல்துறையினருக்கு போன் செய்யக் கூடாது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அரசு அதிகாரிகள் வெளியேறியவுடன் தனிப்பட்ட முறையில் அமைச்சர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் சில அறிவுரைகளை கூறியுள்ளார்..அப்போது தொகுதி பிரச்னைகள் குறித்து என்னிடமும் தெரிவிக்கலாம் என்றும் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் போதே தன்னிடமும் நேரடியாக முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சி பிரச்சினைக்காக காவல்துறைக்கு போன் செய்யக் கூடாது என்றும் காவல் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்றும் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருப்பதால் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக .வினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்தனைக்கும் இடையில் கொரோனா காலத்தில் ஸ்டாலின் ஒதுங்கி இருப்பார் என்கிற குற்றச்சாட்டை உடைக்கும் விதமாக படு சுறுசுறுப்பாக அனைவருடனும் மக்கள் பணி, அமைச்சரவை கூட்டம், எம்.எல்.ஏக்கள் ஆலோசனை என படுவேகமாக இயங்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். 

ஆனாலும், இந்த செயல்பாடுகள் தற்காலிகம்தான். அடுத்தடுத்து அவரது செயல்பாடுகளை பொறுத்திருந்து பாருங்கள். பழையகுருடி கதவை திறடி என்கிற கதையாகும் என எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அந்த  பேச்சுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் அதிரடி வியூகங்களை வகுத்து சிறப்பான ஆட்சியை தொடர்வார் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். 

click me!