வாண்டடா வந்து சிக்கிய ஓபிஎஸ், இபிஎஸ்.. 250 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

By vinoth kumarFirst Published May 11, 2021, 11:22 AM IST
Highlights

ஊரடங்கு விதிகளை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது 5 பரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஊரடங்கு விதிகளை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது 5 பரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக முழுவதும் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர்அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பாலகங்கா நேற்று மனு அளித்திருந்தார். இந்த கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள் உடன் போலீசார் தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டது. எம்எல்ஏக்கள் மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாமல் யாரும் கூடக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில்கூடி மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இவர்களை எந்தத் தலைவர்களும் தடுக்கவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். கூட்டத்தில் 3 மணிநேரம் விவாதங்களுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கோபமாக வெளியேறினார்.

இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி அதிமுக ஒருங்கிணபை்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணபை்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலைய செயலாளர் மாகலிங்கம் உள்ளிட்ட 250 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

click me!