ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஆரம்பம் முதலே தட்டித்தூக்கிய திமுக.. பின்தங்கிய அதிமுக, காணாமல் போன பாமக..

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2021, 10:31 AM IST
Highlights

6 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 74.37 சதவீத வாக்குகளும், 9 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குபதிவில் சரியாக  78. 47 சதவீத வாக்குகளும் பதிவானது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.35  சதவீதமும் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 69.34 சதவீத வாக்குகளும் பதிவாகின

.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதிக இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 7 மாவட்ட கவுன்சிலர்கள், 12 ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களில் வெற்றி பெற்று திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக 1 மாவட்ட கவுன்சிலர் இடத்தை மட்டுமே கைப்பற்றி பின்னிலையில் உள்ளது. பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு இடங்கள் கூட இல்லாத நிலை உள்ளது.  ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 74 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 74 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 6 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 74.37 சதவீத வாக்குகளும், 9 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குபதிவில் சரியாக  78. 47 சதவீத வாக்குகளும் பதிவானது. 

இதையும் படியுங்கள் : பெஞ்ச் தேய்த்து, ஹாயாக சம்பளம் வாங்கிய அதிகாரிகள்.. கண்டறிந்து ஆப்பு அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.35  சதவீதமும் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 69.34 சதவீத வாக்குகளும் பதிவாகின. அதேபோல் வாக்கு  எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, அது விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நடந்து வருகிறது,31,245 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் https://tnsec.tn.nic.in இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது, வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி மூலம்  மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள் :  அடி தூள்... ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில்  11 மணியளவில் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பம் முதலே பல இடங்களில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. 7 மாவட்ட கவுன்சிலர்கள், 12 ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களில் வெற்றி பெற்று திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக 1 மாவட்ட கவுன்சிலர் இடத்தை மட்டுமே கைப்பற்றி பின்னிலையில் உள்ளது. அமமுக,  நாம் தமிழ் கட்சி, மக்கள் நீதி மய்யம் ,பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதுவரையில் ஒரு இடங்கள் கூட இல்லை என்பது குறிப்பிடதக்கது. 

click me!