தடுப்பூசி செலுத்திய பிறகும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Apr 10, 2021, 11:29 AM IST
தடுப்பூசி செலுத்திய பிறகும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பில் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. 

இதனையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அப்படி இருந்த போதிலும்  பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மோகன் பகவத்திற்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில்;- கொரோனா அறிகுறியுடன் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் 7-ம் தேதியன்று மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதாகும் மோகன் பகவத்திற்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!