அரக்கோணம் அரசியல் படுகொலை.. வன்மம் நிறைந்த இக்கொடூரம் இனியும் தொடரக்கூடாது.. டிடிவி தினகரன்.

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2021, 10:53 AM IST
Highlights

அந்த வரிசையில் படுகொலையை கண்டித்து வரும் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

அரக்கோணத்தில் அரசியல் உள்நோக்கத்துடன்கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இத்தகைய வன்மம் நிறைந்த செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்திட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோமனூரில் அர்ஜுனன், சூர்யா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் தேர்தல் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த படுகொலைகளை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. படுகொலைகளுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்புகள் கடும்  கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அந்த வரிசையில் படுகொலையை கண்டித்து வரும் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தேர்தலுக்காக அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்ட இப்படுகொலை  தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுபோன்ற வன்மம்  நிறைந்த சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அர்ஜுன், சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. பெரும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய இந்த பாதகத்தை செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,  இத்தகைய வன்மம் நிறைந்த செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
 

click me!