தலித் இளைஞர்கள் கொடூர கொலை.. பாதக செயலில் ஈடுபட்டவர்களை சும்மாவிடக்கூடாது.. கொதிக்கும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Apr 10, 2021, 10:22 AM IST
Highlights

அரக்கோணத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன்,சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப்  பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரக்கோணத்தில் தேர்தல் முன் விரோதத்தால் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோதத் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு தலித் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில், அர்ஜூனனுக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியுள்ளன. அவர்களின் நண்பர்கள் மதன், வல்லரசு, சவுந்தர்ராஜ் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலையை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரின் மகன் சத்யா தலைமையிலான 10 பேர் அரங்கேற்றியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக மதன், அஜித், புலி, குமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகவுள்ள மேலும் 3 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு திருமாவளவன், வைகோ, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அரக்கோணத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன்,சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப்  பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரக்கோணத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன்,சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப் பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். 1/2

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய வன்மம் நிறைந்த செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்திட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!