இன்று முதல் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை.. விதி மீறும் பயணிகள்..

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2021, 10:16 AM IST
Highlights

பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. இருந்த போதும் சென்னை கோயம்பேட்டில் இருந்து செல்லக்கூடிய மாநகராட்சி பேருந்துகளில் மக்கள் அதிகளவில் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.

இன்று முதல் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது, தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 

பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. இருந்த போதும் சென்னை கோயம்பேட்டில் இருந்து செல்லக்கூடிய மாநகராட்சி பேருந்துகளில் மக்கள் அதிகளவில் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். முககவசம் அணியாமலும்,பேருந்துகளில் நின்றவாறும் தொடர்ந்து அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் பயணித்தவாறு உள்ளனர்.

அதுமட்டுமின்றி பெருமளவு பேருந்துகளில் உள்ள சானிடைசர்கள் காலியாக உள்ள நிலை தொடர்கிறது. அதேபோன்று தமிழகத்திலிருந்து புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்று கொண்டு செல்ல அனுமதியில்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

click me!