வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. முகக் கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்.. கட்டுப்பாடுகள் தீவிரம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2021, 11:23 AM IST
Highlights

அனைவரும் முழு கவசம் அணிய வேண்டும் என்ற அடிப்படையில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வருகின்றனர்.  

கொரோனா  கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே  இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலைகள் இதற்கு நல்ல பலன் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கொரோனாவைரஸ் இரண்டாவது அலை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தீவிரமாகி உள்ளது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதேபோல் கொரோனா கட்டுப்பாடுகளும் கடந்தாண்டைப் போலவே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுமென பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் அறிவித்தது. 

அனைவரும் முழு கவசம் அணிய வேண்டும் என்ற அடிப்படையில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வருகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடு நல்ல பலனை கொடுத்திருப்பதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மீறி முக கவசம் அணியாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!