ரூ. 23 லட்சம் கோடி எங்கே..? மத்திய அரசுக்கு புள்ளிவிவரத்தை பட்டியல் போட்டு ராகுல் காந்தி கேள்வி..!

By Thiraviaraj RMFirst Published Sep 1, 2021, 5:42 PM IST
Highlights

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் பிரதமர் மோடியின் நண்பர்கள் நான்கைந்து நண்பர்களுக்கே பலன் கிடைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் பிரதமர் மோடியின் நண்பர்கள் நான்கைந்து நண்பர்களுக்கே பலன் கிடைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது போன்ற நிலை 1991ம் ஆண்டு இருந்த போது மீண்டு இந்திய பொருளாதாரம் சரியான நிலையில் மறுபடியும் தவறான பொருளாதார யுக்தியை நடைமுறைக்கு கொண்டு வந்து எதிர்கால இந்திய பொருளாதாரத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளனர் என பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ‘’கடந்த 7 ஆண்டில் பெட்ரோல், டீசல் , கேஸ் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த ரூ. 23 லட்சம் கோடி எங்கே சென்றது ஒரு பக்கம் பண மதிப்பிழப்பையும் மற்றொரு பக்கம் பணமாக்குதல் திட்டத்தையும் அறிவிக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், உள்ளிட்டோர் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014-க்குப் பிறகு பெட்ரோல் 42 சதவீதம், டீசல் 55 சதவீதம் உயர்ந்துள்ளது. 

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் பிரதமர் மோடியின் நண்பர்கள் நான்கைந்து நண்பர்களுக்கே பலன். பணமதிப்பீடு இழப்பு ஒரு புறம், விவசாயிகள், சிறு குறு வணிகர்கள், சிறு வியாபாரிகளை துயரில் தள்ளியது. மறு புறம் தேசத்தின் சொத்துக்களை விற்பனை செய்து பணவரவை இந்த அரசாங்கம் செய்து பொருளாதாரத்தை சீரழிக்கின்றது” என அவர் தெரிவித்தார். 

click me!