பாஜகவினர் தான் தமிழகத்தில் போதைப்பொருளை விற்பனை செய்கிறார்கள்..? கடும் குற்றச்சாட்டு கூறிய ஆர் எஸ் பாரதி

By Ajmal KhanFirst Published Nov 24, 2022, 9:39 AM IST
Highlights

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஆளுநரிடம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் புகாரளிக்கிறார். ஆனால் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களே பாஜகவினர் தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
 

ஆளுநரிடம் இபிஎஸ் புகார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் மாணவர்களிடையே  போதை பொருள் கட்டுப்படுத்துவதை  நிர்வாக திறமையின் காரணமாக தமிழக அரசால் தடுக்க முடியவில்லையென தெரிவித்தார், மேலும் அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் போதைப் பொருள்கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.   இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் மதுபானங்களில்  மிகப்பெரிய கொள்ளை நடைபெறுவதாக தெரிவித்தவர், 24 மணி நேரமும் பார்கள் இயங்கி கொண்டிருப்பதாகவும், சட்டவிரோதமாகவும் பார்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்… சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

போதைப்பொருள் விற்பனை செய்வதே பாஜக தான்

இதற்க்கு பதில் அளிக்கும் வகையில், பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் போதைப்பொருள் அதிகளவில் நடமாட்டம் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். ஆனால் சிபிஐ குட்கா விற்பனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். நாளைய தினம் நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஆளுநரிடம் புகார் அளிக்கிறார். எனவே உறுதிபட சொல்கிறேன் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் பாஜகவினர் என ஆர்.பாரதி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறி! அதற்கு அமைச்சர்கள் சண்டையே உதாரணம்! திமுகவை ரவுண்ட் கட்டும் டிடிவி.!
 

click me!