தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. திமுக, ஆளுநரை விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று தான் எனவே ஆளுநர் தான் திமுகவை தட்டிக் கேட்க வேண்டும் கூறியிருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கனிமொழி கடுமையான விமர்சித்துள்ளார்.
தமிழக உரிமையை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டினை புகழும் எதிர்க்கட்சியினரை என்ன சொல்வது. இதை தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என திமுக எம்.பி. கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர். அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் தொடர்பான புகார் மனுவையும் அளித்தனர்.
இதையும் படிங்க;- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.! ஆளுநர் ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.! எடப்பாடி பழனிசாமி
undefined
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. திமுக, ஆளுநரை விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று தான் எனவே ஆளுநர் தான் திமுகவை தட்டிக் கேட்க வேண்டும் கூறியிருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கனிமொழி கடுமையான விமர்சித்துள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி. ;- அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக உரிமைகள் ஆளுநரிடம் அடகு வைக்கப்பட்டிருந்ததாக விமர்சித்தார். தமிழக உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டினை அதிமுகவினர் பாராட்டுகின்றனர். தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா என கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- அண்ணன் திமுக தலைவர்..! தங்கை துணைப்பொதுச்செயலாளர்..! வாரிசு அரசியலை உறுதிப்படுத்துகிறது- தமிழிசை