பாஜக பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..! அண்ணாமலை, சூர்யா சிவா மீது போலீசில் புகார்..! கைது செய்ய வாய்ப்பா..?

By Ajmal KhanFirst Published Nov 24, 2022, 8:14 AM IST
Highlights

பாஜக பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் சூர்யா சிவா மீது மதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

பாஜக OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும், சிறுபான்மையினர் மாநில தலைவர் டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவில் டெய்சி சரணை ஆபாசமாக பேசி  கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து சூர்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும் கட்சி நிகழ்வுகளி்ல் பங்கேற்கவும் சூர்யா சிவாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பாக டெய்சி சரண் காவல்நிலையத்தில் புகார் அளிக்காத நிலையில், மதுரை அண்ணா நகர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கு… கிஷோர் கே சுவாமிக்கு ஜாமீன்!!

சூர்யா சிவா மீது போலீசில் புகார்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், பாஜக ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூரிய சிவா, பாஜக சிறுபான்மை அணி தலைவர்  மருத்துவர் டெய்சி சரணுடன் பேசிய ஆடியோ வெளியானது.  இதில் டெய்சி சரணை  இழிவுபடுத்தும் விதமாகவும் கொலை மிரட்டல் விடுத்தும் சூர்யா பேசி உள்ளார். மேலும் பாஜக நிர்வாகி கேசவ் நாயகனம் தொடர்பாக மோசமாக வகையிலும் பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு 15 நாட்களுக்கு முன்பே புகராக சென்றுள்ளதாகவும், ஆனால்  15 நாட்களாக அண்ணாமலை இந்த குற்றத்தை வெளியே சொல்லவில்லை என தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்… சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

குற்றத்தை மறைத்த அண்ணாமலை

ஒரு குற்ற சம்பவம்  தெரிந்தால் அதை உடனடியாக காவல்துறையிடம் புகாராக அளிக்க வேண்டும். ஆனால் அண்ணாமலை ஐபிஎஸ் படித்ததாக கூறுகிறார் அவருக்கு இது தெரியாதா என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த குற்றத்திற்கு இன்றுவரை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று தெரியவில்லை. குற்ற சம்பவத்திற்கு நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள்

முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறி! அதற்கு அமைச்சர்கள் சண்டையே உதாரணம்! திமுகவை ரவுண்ட் கட்டும் டிடிவி.!

click me!