#BREAKING குடிமகன்களால் நிகழ்ந்த சாதனை.. கடைசி 2 நாள் மூக்குபிடிக்க அடித்த சரக்கு.. கல்லா கட்டிய அரசு..!

By vinoth kumarFirst Published Nov 5, 2021, 11:30 AM IST
Highlights

 தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ரூ. 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளான 3ம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.38 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 47.21 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.27 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.36.75 கோடிக்கும் மது விற்பனையானது. 

தமிழகத்தில் தீபாவளியையொட்டி 2 நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

இதையும் படிங்க;- அதிர்ச்சி.. தங்கை முறை பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டி படுகொலை.!

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ரூ. 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளான 3ம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.38 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 47.21 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.27 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.36.75 கோடிக்கும் மது விற்பனையானது. 

தீபாவளியன்று சென்னை மண்டலத்தில் ரூ.41.84 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.51.68 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.46.62 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.47.57 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.37.71 கோடிக்கும் மது விற்பனையானது.

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க 2 கள்ளக்காதலர்கள் போட்டா போட்டி.. அப்புறம் நடந்த கூத்தை மட்டும் பாருங்களே.!

தீபாவளிக்கு முந்தைய நாளில் கடந்த ஆண்டு ரூ.227.88 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.205.61 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளியன்று ரூ.239.81 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.225.42 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.431.03 கோடிக்கு மதுவிற்பனையாகியிருக்கிறது.

click me!