நீட் தேர்வை எதிர்க்க துப்பு இல்ல.. திமுகவை எதிர்த்து போராட்டமா.? பதற்றத்தில் துரைமுருகன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2021, 10:06 AM IST
Highlights

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிலவி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகளின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது, அந்தவகையில் முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்யப்போகிறேன், 

நீட் தேர்வுக்கு எதிராக கருத்தும் தெரிவிக்க தைரியமில்லாத அதிமுக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா? என தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர்  துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை  நிலவரம் குறித்து எதையும் அறிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான முக்கிய நீராதாரமாக இருந்துவருகிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் அந்நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் பாசனத்திற்காக, குடிநீர் தேவைகளுக்காகவும் கேரள ஆரசின் அராஜகத்தால் அல்லல் படும் சூழல் இருந்து வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீர் தேங்குவது கூடாது, அணை சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது, எனவே அதிக நீரை தேக்கும் போது அணை பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது, அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் 50 லட்சம் மக்களுக்கு ஆபத்தாக முடியக்கூடும் என கேரளா அரசு கூறி வருவதுடன், அது தொடர்பான வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழகத்திற்கு தலைவலி கொடுத்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 142 அடி நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும், அதேபோல் அணையை உறுதிப்படுத்திய பின்னர் 152 அடி அளவுக்கு தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றார். இந்நிலையில் திமுக அரசு பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் நீர்வளத் துறை அமைச்சராக துரைமுருகன் இருந்துவரும் நிலையில், மீண்டும் கேரளா முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீரை தேக்கக்கூடாது என பிரச்சனை கிளப்பிவருகிறது.

கேரளத்தில் சமிபத்தில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இந்த பிரச்சினையை தீவிரமாகியுள்ளது. இது தொடர்பான வழக்கையும் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்துள்ளது.  இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் 142  அடிக்கு நீரை எட்டுவதளற்கு முன்பாகவே கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அந்த அணையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக நீர்வளத்துறை தண்ணீரை, தண்ணீரை திறந்து விட்டதாக அதிம்க புகார் தெரிவித்துள்ளது. அணையில் 152 அடி தண்ணீரை தேக்கினால் மட்டுமே இந்த ஐந்து மாவட்டங்களில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் கடைமடைவரை தண்ணீர் வந்து சேரும், ஆனால் அணை 142 அடியை எட்டுவதற்கு முன்னரே அணை திறந்துவிடப்பட்டுள்ளது. கேரள அரசுக்கு தமிழக நீர்வளத் துறையின் துணை போயுள்ளது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்றுத்தந்த உரிமையை துரைமுருகன் தாரை வார்த்து விட்டார். எனவே திமுக அரசை கண்டித்து வரும் 9ஆம் தேதி 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதிமுகவின் இந்த போராட்ட அறிவிப்பு திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில்  முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய இன்று  தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன்,  மதுரை  புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிலவி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகளின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது, அந்தவகையில் முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்யப்போகிறேன், முல்லைப் பெரியாறு அணை பற்றி பல்வேறு விதமான தகவல்கள் தமிழ்நாட்டில் உலவிக் கொண்டிருக்கிறது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்து அவர்கள் தரப்பு அறிக்கையை தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல், அணையின் நிலவரம் குறித்து அறிந்துகொள்ளாமல் அதிமுக போராட்டம்  அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.  நீட் தேர்வுக்கு எதிராக எவ்வித கருத்தும் தெரிவிக்க தைரியமில்லாத அதிமுக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டம்  அறிவிப்பதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!