Breaking news: அரசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4,000... திமுகவின் தேர்தல் அறிக்கை..!

Published : Mar 13, 2021, 12:49 PM ISTUpdated : Mar 13, 2021, 01:02 PM IST
Breaking news: அரசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4,000... திமுகவின் தேர்தல் அறிக்கை..!

சுருக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

திருக்குறளை தேசிய நூலக்க மத்திய அரசை வலியுறுத்தல்.  திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அதிமுக ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் . குடும்ப அட்டை ஒன்றுக்கு கொரோனா நிவாரன நிதியாக ரூ.4000 வழங்கப்படும்.  சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்

பொங்கல் விழா மாபெரும் பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படும். அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்.  தமிழகத்தில் 400 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். மலைக்கோவில்களில் கேபிள் கார் அமைக்கப்படும். இந்து ஆலையங்கள் புரனமைக்கவும், குடமுழுக்கு நடத்த ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் குறை தீர் முகாம்கள் அமைக்கப்படும் . மசுதி சர்ச்சுகளை புதுப்பிக்க 200 கோடி ஒதுக்கப்படும். இந்துக் கோயில்களை புணரமைக்க 1000 கோடி வழங்கப்படும்.  பத்திரிகையாளர்/ ஊடகத்துறையினர் தனி நல வாரியம் அமைக்கப்படும். ஓய்வு நலத்தொகை உயர்த்தி அளிக்கப்படும். 

ஆறுகளின் மாசுகளை கட்டுப்படுத்த தனி வாரியம் அமைக்கப்படும். முதியோர் & ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.1500 ஆக அதிகரிக்கப்படும். நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகம்; முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் படி பணி நியமனம்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழயர்களாக நியமனம் செய்யப்படுவர். பொங்கல் பண்டிகை தமிழர் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும். திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும் . மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும்.

மகளிருக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்கள். மகளிருக்கு பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.  நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற தொடரிலேயே தீர்மானம்.  8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை . மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  புகழ்பெற்ற இந்து கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ரூ.25,000 வழங்கப்படும். திருச்சி, மதுரைல மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம். தமிழகம் முழுவதும் 200 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை. ரேஷன் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுவதுடன் உளுத்தம்பருப்பு  மீண்டும் வழங்கப்படும்.

 விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்படும். பெறப்பட்ட மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்க படும். தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய இத்திட்டம் செயல்படுத்தப்படும். கல்வி நிறுவனங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். ஜெயலலிதா மர்ம மரணத்தின் விசாரணை ஆணையத்தை விரைந்து செயல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும்'' எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!