ஊழலில் ஊறிப்போன திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் குட்டிச் சுவருதான்... அதகளப்படுத்தும் முதல்வர் எடப்பாடி..!

Published : Mar 13, 2021, 12:36 PM IST
ஊழலில் ஊறிப்போன திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் குட்டிச் சுவருதான்... அதகளப்படுத்தும் முதல்வர் எடப்பாடி..!

சுருக்கம்

தமிழகத்தில் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு தான் முதல்வர் ஆகிவிட்டதைபோல நினைத்து ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு தான் முதல்வர் ஆகிவிட்டதைபோல நினைத்து ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஏற்காடு எஸ்டி தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.சித்ராவிற்கு ஆதரவு திரட்ட  வாழப்பாடியில் திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில்;- தமிழக மக்களுக்காக நல்ல திட்டங்களை தந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு வாரிசுகள் இல்லை. மக்களாகிய நாம் தான் இவர்களுக்கு வாரிசுகள். கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு குடும்பம். ஸ்டாலினும் தற்போது வாரிசு அரசியலை நடத்தி கொண்டிருக்கிறார். 

தமிழகத்தில் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு தான் முதல்வர் ஆகிவிட்டதைபோல நினைத்து ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.நாட்டுக்கு நன்மை செய்பவர்களை வெற்றி பெற செய்யுங்கள். திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். திமுக நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக. அதிமுக மீது ஸ்டாலின் கூறும் குற்றசாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

கொரோனா காலத்தில் அரசி பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்கி மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. பெண்கள், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. நில அபகரிப்புகள் நடக்கும் நான் முதலமைச்சராக இருப்பது சேலம் மாவட்ட மக்களுக்கு பெருமை. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதே முதலமைச்சரின் பணி. முதலமைச்சர் ஆவேன் என ஸ்டாலின் கனவு காணலாம்; அது நடக்கவே நடக்காது என கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!