இன்னும் சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியாகிறது.. பெண்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள்..?

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2021, 12:30 PM IST
Highlights

ஒரு கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணிகளாகவும் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளுமே வெளியிடுவதில்  தீவிரம் காட்டி வரும் நிலையில், இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ளது. அதை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார். அதிமுக- திமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் மிகத் தீவிரம் காட்டி வருகின்றன.அதில் ஏராளமான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணிகளாகவும் இருந்து வருகிறது. 

அந்த அளவிற்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளுமே வெளியிடுவதில்  தீவிரம் காட்டி வரும் நிலையில், இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது.அதில் ஏழை எளியோருக்கு பயன்தரும் வகையில் என்னென்ன திட்டங்கள் அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக மிகப்பெரிய இலவச அறிவிப்புகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம், விவசாயம்,மருத்துவக்கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்றவற்றை குறிவைத்து தேர்தல் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று வெளியாக உள்ள திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள் : குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது ஆனால் இது உறுதி செய்யப்பட்ட தகவல் அல்ல. இருந்தாலும் கிட்டதட்ட இதையொட்டி இருக்கும் என கூறப்படுகிறது. 

* மகளிர் குழுக்களுக்கான தனி ஆணையம் அமைக்கப்படும். 

* நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 

* 7 தமிழர் விடுதலை

* எட்டு வழி சாலை திட்டம் ரத்து.

* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்துதல்

* அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளை மேம்படுத்தி புதிய வேலைகளை உருவாக்குதல்

* அதானி துறைமுகம் திட்டத்திற்கு எதிர்ப்பு.

* முதியோர் விதவை மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியத்தை முறையாக வழங்குதல் மற்றும் அதிகரித்தல்.

* இருமொழிக் கொள்கை.

* இந்தித் திணிப்பு எதிர்ப்பு

* உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண தனி ஆணையம்  அமைக்கப்படும்.

* கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான மீட்பு நடவடிக்கை. 

* பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் / ஸ்மார்ட் வகுப்புகளுக்கு தேவையான திட்டங்கள். ஆகியவை இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.  
 

click me!