30 நாட்களுக்குள் ரூ.300 கோடியா..? திமுக அமைச்சரின் பேரம்... கசிந்தது ஆடியோ..!

By Thiraviaraj RMFirst Published Jun 8, 2021, 2:43 PM IST
Highlights

 அமைச்சர் துரைமுருகன் உதவியாளராக சந்தேகிக்கப்படும் ஒருவருடன் மணல் கூட்டணியின் இடைத்தரகர் ஒருவர் பேசுவதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.

நீர்வளத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டபின் சொந்த தொகுதியான காட்பாடியில் வாயிலாக மணல் குவாரிகளை நடத்த, நாகு பேரிடம் டீல் பேசி முடித்துள்ளார் அந்த மூத்த அமைசர். 

பொதுவாகவே அந்த அமைச்சர் கறார் பார்ட்டி. இடைத்தரகர்களை வைத்துக் கொள்ள மாட்டார். அப்படியே இடைத்தரகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான கமிஷன் கொடுக்க மாட்டார். அதேபோல் கட்சியில் செல்வாக்குள்ளவர்கள் ரெக்கமெண்ட் செய்து அனுப்பும் நபர்களை கண்டு கொள்ள மாட்டார். ‘’ஏன் அவர் சொன்னா நாங்க செய்து கொடுக்கணுமா..? போங்கய்யா வேலையை பார்த்துகிட்டு... என அவமதித்து அனுப்புவார். அவரை பொறுத்தவரை நேரடி டீல். நோ கமிஷன் என்பது தான் நோக்கம். அப்படித்தான் மணல் குவாரிகளை நடத்த நான்குபேரிடம் டீல் பேசி முடித்தவருக்கு கமிஷன் கிடைக்கவில்லை. ஆகையால் அவர், ஒரு ஆடியோவை கசியவிட்டுள்ளார். அந்த ஆடியோ தான் தற்போதைய ஹாட் டாபிக்.

கடந்த ஆட்சியில், தமிழக ஆறுகளில் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்ததில், பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டி, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன், கரிகாலன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம் ஆகியோர் அடங்கிய கூட்டணிக்குப் பெரும் பங்கு உண்டு. கோடிகளில் கொடிக்கட்டிப் பறந்தது, இந்தக் கூட்டணி. முறைகேடுகளால், வரலாறு காணாத அளவுக்கு மணல் விலையும் உச்சத்துக்குச் சென்றது. மணல் அதிகம் அள்ளியதால், பல ஆறுகளில் நீரோட்டம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்குகளால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மணலுக்கு மாற்றாக ‘எம்-சாண்ட்’ விற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. தொடர்ந்து, சட்‌டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கிலும், சேகர்ரெட்டி மற்றும் அவரின் மணல் கூட்டணி நண்பர்களான ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோரும் அமலாக்கத்துறையிடம் சிக்கினர். 

தற்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், நீர்வளத்துறை மூலமாக மணல் குவாரிகளை மீண்டும் நடத்த மூன்று நிறுவனங்கள் ரகசியமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான துரைமுருகன் வீட்டில் கையெழுத்தாகியிருப்பதாகவும், மணல் கூட்டணியிடமிருந்து 300 கோடி ரூபாய் துரைமுருகன் தரப்புக்கு கைமாறியிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலாவுகின்றன. அதில், சேகர்ரெட்டி தலைமையிலான மணல் கூட்டணியின் பெயர்களே கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அமைச்சர் துரைமுருகன் உதவியாளராக சந்தேகிக்கப்படும் ஒருவருடன் மணல் கூட்டணியின் இடைத்தரகர் ஒருவர் பேசுவதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.

அதில், புரோக்கர்?: ‘போய்விட்டார்களா... இருக்காங்களா?’ உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘முடிந்தது’
புரோக்கர்: ‘தமிழ்நாடு முழுக்கவா... நாலு மாவட்டம் மட்டுமா?  'படிக்காசு' (மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த ஒரு நபரின் பெயர்) என்னாச்சு?’

உதவியாளர்:தமிழ்நாடு முழுக்கத்தான். அவருக்கும் பிரிச்சி தருவாங்க.

புரோக்கர்: ‘மொத்தம் மூணு பேரா?’

உதவியாளர்:‘இல்லை. நாலு பேர்’

புரோக்கர்: ‘யார் யாரு?’

உதவியாளர்: ‘ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், அப்புறம் வேலூர்காரர் சேகர்ரெட்டி. இதுக்கெல்லாம் சேகர்ரெட்டிதான் ஹெட்டு.’

புரோக்கர்: ‘சேகர்ரெட்டி வந்தாரா?’

உதவியாளர்: ‘அவர் வர்லை. முன்ன ஒரே முறை மட்டும் வந்துட்டுப் போனாரு. அவங்களே பிரிச்சி கொடுப்பாங்க.’

புரோக்கர்: ‘எது இருந்தாலும், ஐயா (துரைமுருகன்) கிட்ட கேட்டுச் சொல்லுங்க.

உதவியாளர்: ‘வாங்கிக்கிலாம்... வாங்கிக்கலாம்’என்பதுடன் அந்த உரையாடல் பதிவு முடிகிறது.

30 நாட்களில் முத்திரை பதித்த மு.க.ஸ்டாலின் ஆட்சி என செய்தி தாள்களிலும், இணையங்களிலும் விளம்பரங்களில் பாராட்டு மழை குவிந்து வருகிறது. இந்நிலையில் 30 நாளில்ரூ.300 கோடி பேரம் பேசிய திமுக மூத்த அமைச்சர் என்கிற ஆடியோ கசிந்ததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் மக்கள். 

click me!