
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் திட்டம் தொடக்கத்தின் அடையாளமாக 12 கலைஞர்களுக்கு முதலமைச்சர் நிதி வழங்கினார்.
தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார். அவரின் அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் நல திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருகிறது. அந்த வகையில் நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் திட்டம் தொடக்கத்தின் அடையாளமாக 12 கலைஞர்களுக்கு முதலமைச்சர் நிதி வழங்கினார். இந்த நிகழ்வில் அச்சங்கத்தின் தலைவர் தேவா ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2018-19 ஆண்டு 500 பேரும், மற்றும் 2019-20 ஆண்டுகளில் தலா 1000 பேர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாயில் உதவி தொகையாக 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அண்மையில் முதலமைச்சர் அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இன்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடகக் கலைஞர்கள் கூறுகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் ஈடுபட்டு வருவதாகவும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு இந்த நிதியுதவி பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும் இதனை வழங்கிய முதலமைச்சர் அவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.