சமூக அக்கறை கொண்ட திமுக.. கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வேண்டும்.. MP ரவிக்குமார்.!

By vinoth kumarFirst Published Jun 8, 2021, 2:03 PM IST
Highlights

மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணை வழங்குமாறு வேண்டுகிறேன் என ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள் வைத்துள்ளார்.

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை தரும் ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைச் சேர்த்து தமிழக அரசு 1986ம் ஆண்டு ஆணையிட்டுள்ளது.

2006 முதல் 2011ம் ஆண்டு வரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தின்போது கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்று இருந்தனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத் திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணியில் நியமனம் செய்யப்படவில்லை.

click me!