வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jun 8, 2021, 2:10 PM IST
Highlights

வெப்பச்சலனம் காரணமாக. 08.06.2021, 09.06.2021: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  

வெப்பச்சலனம் காரணமாக.08.06.2021, 09.06.2021: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.10.06.2021   முதல் 12.06.2021 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 


கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்): 

YMCA நந்தனம்  (சென்னை) 7, அண்ணா  பல்கலை (சென்னை), பூந்தமல்லீ  (திருவள்ளூர்), சென்னை  விமான நிலையம், கலவை (ராணிப்பேட்டை), சாய் ராம் கல்லூரி  மேற்கு தாம்பரம்   (செங்கல்பட்டு) தலா  5, ஸ்ரீபெரும்புதூர்  (காஞ்சிபுரம்), அம்முந்தி  (வேலூர்) தலா  4, திருவாலங்காடு  (திருவள்ளூர்),  சோளிங்கர்  (ராணிப்பேட்டை), வேலூர்  தலா  3,  கோத்தகிரி  (நீலகிரி), கொரட்டூர்  (திருவள்ளூர்) தலா   2, சென்னை நுங்கம்பாக்கம்,   விருதுநகர்,  சதியார்  (மதுரை)  தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : 

08.06.2021  முதல் 12.06.2021  வரை: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 08.06.2021   முதல் 10.06.2021 வரை  : தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 08.06.2021 , 09.06.2021: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

10.06.2021 : மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 11.06.2021, 12.06.2021: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.10.06.2021  முதல் 12.06.2021  வரை: கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 08.06.2021   முதல் 12.06.2021  வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

click me!