தமிழக சட்டமன்றத்தேர்தலில் பாஜக இறக்கிய ரூ.260 கோடி... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட எஸ்.வி.சேகர்..!

By Thiraviaraj RMFirst Published May 27, 2021, 3:13 PM IST
Highlights

தமிழக தேர்தலில் பா.ஜ.க. ரூ.260 கோடி கறுப்புப்பணம் செலவிட்டதா? பா.ஜ.க. பிரமுகரான நடிகர் எஸ்.வி. சேகர் வெளியிட்ட பரபரப்பு தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 

தமிழக தேர்தலில் பா.ஜ.க. ரூ.260 கோடி கறுப்புப்பணம் செலவிட்டதா? பா.ஜ.க. பிரமுகரான நடிகர் எஸ்.வி. சேகர் வெளியிட்ட பரபரப்பு தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்காக அக்கட்சி 260 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக எஸ்.வி.சேகர் கரும் குற்றசாட்டை முன் வைத்துள்ளார். 

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் மட்டும் வேட்பாளர்களுக்கு பா.ஜ.க. தலா ரூ.13 கோடியை கொடுத்ததாக எஸ்.வி.சேகர் ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில், வெளியாகியுள்ள ட்விட்டர் ஸ்பேஸ் என்கிற பக்கத்தில் பேசியுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், ‘’பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கு ரூ.13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தோல்வியுற்றவர்களும், வெற்றிபெற்றவர்களும் கட்சிக்கு முறையாக கணக்கு கொடுத்துள்ளார்களா? கொடுக்க வேண்டும் இல்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகரின் இந்தப்பேச்சு, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. பாஜக கட்சியில் உள்ள எஸ்வி சேகரே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதால் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களுக்கு ரூ.260 கோடி செலவளித்து இருப்பது அம்பலமாகி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருப்புப்பணத்தை ஒழிப்பதாக கூறிவரும் பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாக பலரும் கருத்துக் கூறி வருகின்றனர். எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவிக்காததால் அவரது பேச்சு உண்மையானதாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

click me!