செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் குத்தகைக்கு வேண்டும்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

By vinoth kumarFirst Published May 27, 2021, 2:28 PM IST
Highlights

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு குத்தகைக்கு தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு குத்தகைக்கு தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி உற்பத்தி மையம் கட்டி முடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதைத் தமிழகம் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று தடுப்பூசி தயாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று எச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்;- கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும். 

தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு வழங்கினால் உடனடியாக உற்பத்தி துவங்கப்படும். தடுப்பூசி போடும் பணிகளும் விரைவுபடுத்தப்படும். தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

click me!