குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!

By Raghupati RFirst Published Jan 16, 2023, 5:25 PM IST
Highlights

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

கர்நாடகா சட்டசபைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்ந்து தோல்வியின் பிடியில் சிக்கிய காங்கிரஸ் கட்சிக்கு இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றி உத்வேகம் கொடுத்துள்ளது. அங்கு பாஜகவை ஆட்சி கட்டிலில் அகற்றி காங்கிரஸ் புதிய ஆட்சியை அமைத்தது. அதேபோணியில் கர்நாடகாவிலும் பாஜகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.

இதையும் படிங்க..TN BJP: தைரியமான பெண்! நம்பிக்கை முக்கியம்.. காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்த வானதி சீனிவாசன்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘க்ருஹ லக்ஷ்மி’ திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு தலைமை தாங்கும் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அப்போது பேசிய அவர்,நாங்கள் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை காங்கிரஸ் அளிக்கிறது. இந்தத் தொகை நேரடியாக குடும்பத் தலைவரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் இந்த வருமானம், விலைவாசி உயர்வு மற்றும் எல்பிஜி விலை உயர்வு ஆகியவற்றின் சுமையை சமாளித்து அவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த உதவும். இந்தத் திட்டத்தின் மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள் என்று சூப்பரான அறிவிப்பை பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர் காங்கிரஸ் கட்சியினர். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..கடைசியாக கடவுளை சந்தித்துவிட்டேன்.! நெகிழ்ந்த எஸ்.எஸ் ராஜமௌலி.. யார் தெரியுமா அது.?

click me!