ரூ.197 கோடி சொத்துகள் ஏலம்..! தவிக்கும் கே.சி.பழனிச்சாமி..! விசாரித்து ஒதுங்கிய மேலிடம்..!

Published : Aug 06, 2021, 11:11 AM ISTUpdated : Aug 06, 2021, 11:16 AM IST
ரூ.197 கோடி சொத்துகள் ஏலம்..! தவிக்கும் கே.சி.பழனிச்சாமி..! விசாரித்து ஒதுங்கிய மேலிடம்..!

சுருக்கம்

கடந்த வாரம் செய்தித்தாள்களில் வந்த விளம்பரம் கே.சி.பழனிச்சாமியை மட்டும் அல்ல ஒட்டு மொத்த கரூர்திமுகவினரையும் அதிர வைத்துவிட்டது. ஏனென்றால் ஒரு காலத்தில் திமுகவின் கஜானாக்களில் ஒருவராக திகழ்ந்தவர் கே.சி.பழனிச்சாமி. கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மொத்த மணல் கான்ட்ராக்டும் பழனிச்சாமி வசம் தான் இருந்தது. 

ஒரு காலத்தில் கரூர் மாவட்ட திமுகவின் அடையாளமாக இருந் கே.சி.பழனிசாமியின் சொத்துகள் தற்போது ஏலத்திற்கு வரும அளவிற்கு நொடிந்து போயுள்ளார் மனுசன்.

கடந்த வாரம் செய்தித்தாள்களில் வந்த விளம்பரம் கே.சி.பழனிச்சாமியை மட்டும் அல்ல ஒட்டு மொத்த கரூர்திமுகவினரையும் அதிர வைத்துவிட்டது. ஏனென்றால் ஒரு காலத்தில் திமுகவின் கஜானாக்களில் ஒருவராக திகழ்ந்தவர் கே.சி.பழனிச்சாமி. கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மொத்த மணல் கான்ட்ராக்டும் பழனிச்சாமி வசம் தான் இருந்தது. இதனை அடுத்து கொங்கு மண்டலம், மத்திய மண்டலத்தில் கட்சிக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக கலைஞர் கே.சி.பழனிச்சாமியைத்தான் அழைப்பார்.

ஆனால் அடுத்தடுத்து தேர்தல்களில் தோற்ற காரணமாக முக்கிய பதவிகள் எதையும் பிடிக்க முடியாமல் தவித்து வந்தார் கே.சி.பழனிச்சாமி. அத்தோடு அவரது மகன் சிவராமன் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் அகலக் கால் வைத்து மிகப்பெரிய நஷ்டத்தை சம்பாதித்தார். இதற்காக செக்யூரிட்டியாக கொடுக்கப்பட்ட 197 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் தான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள். கே.சி.பழனிச்சாமியின் சொத்துகள் ஏலத்திற்கு வந்த நிலையில் அது குறித்து முதன்மையானவரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.

அவரும் மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு உடனடியாக என்ன என்று விசாரிக்கச் சொன்னதாக சொல்கிறார்கள். இதே போல் மத்திய மண்டல அமைச்சரான கே.என்.நேருவையும் கே.சி.பழனிச்சாமியிடம் முதல்வர் பேசச் சொன்னதாக கூறுகிறார்கள். இதனை அடுத்து அமைச்சர்கள் இருவரும் கே.சி.பியிடம் அடுத்தடுத்து பேசியுள்ளனர். இதே போல் அவரை நேரில் சந்திக்கவும் தங்களுக்கு நம்பகமானவர்களை அமைச்சர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் சென்று என்ன பிரச்சனை என்று விசாரித்த போது குடும்பத்தில் உள்ள வில்லங்கம் தெரியவந்துள்ளது.

மேலும் தனி ஒரு நபரால் சரி செய்ய முடியாத அளவிற்கு கே.சி.பி பிரச்சனையில் சிக்கியிருப்பதையும் அமைச்சர்கள் தெரிந்து கொண்டதாக கூறுகிறார்கள். மகன் சிவராமன் அகலக் கால் வைத்திருப்பதையும் அதனை தாமதமாகவே கே.சி.பி. தெரிந்து கொண்டதையும் முதன்மையானவரின் கவனத்திற்கு அமைச்சர்கள் இருவரும் கொண்டு சென்றுள்ளனர். மேலும் தற்போதைக்கு இந்த பிரச்சனையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்பதால் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் கே.சி.பியிடம் மேலிடத்தில் இருந்து கேட்டதாகவும், அதற்கு வழக்கம் போல் மணல் கான்ட்ராக்ட் சம்பந்தமாக பேசியதாக கூறுகிறார்கள்.

ஆனால் தற்போது மணல் கான்ட்ராக்ட் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்பதால் கே.சி.பியை நம்பி கொடுப்பது சரியாக இருக்காது என்று சிலர் முதன்மையானவருக்கு முட்டுக்கட்டை போட்டதாக சொல்கிறார்கள். இதனால் கே.சி.பி பிரச்சனையை தற்போதைக்கு கண்டுகொள்ளாமல் மேலிடம் ஒதுங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..