ஆட்சியை கவிழ்க்க ரூ.1 கோடி... பாஜக பேசிய பேரம்... காங்கிரஸ் எம்.எல்.ஏ... பரபர புகார்..!

By Thiraviaraj RMFirst Published Jul 27, 2021, 3:07 PM IST
Highlights

என்னையும் மற்ற எம்.எல்.ஏக்களையும் அணுகி வருகின்றனர். அந்த நபர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களா என்றால் உறுதியாக தெரியவில்லை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசைக் கவிழ்க்க, பாஜகவினர்  ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரன் உள்ளார். இவர்களது அரசாங்கத்தை உடைக்க சதி நடப்பதாகக் கூறி மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜே.எம்.எம் 30 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் 16, ஜே.வி.எம்.பி மூன்று, ஆர்.ஜே.டி ஒன்று, பாஜகவில் 25 உறுப்பினர்கள் உள்ளனர். நான்கு சுயேச்சைகளும் உள்ளனர். ஜே.எம்.எம், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி கூட்டணி 47 இடங்களை வென்றது, மாநில சட்டசபை தேர்தலில் எளிய பெரும்பான்மைக்கு தேவையானதை விட ஆறு அதிகம்.

இந்த நிலையில் இந்த கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க தன்னிடமும் ரூ.1 கோடிக்குப் பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ நமன் பிக்சல் கொங்காரி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நமன் பிக்சல் கொங்காரி, “காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மூலம் மூன்று பேர் என்னை பலமுறை அணுகினர். அவர்களை வெளியேறச் சொன்னபோது ரூ. 1 கோடிக்கும் மேல் தருவதாக என்னிடம் கூறினார்கள்.

நான் இதுபற்றி அப்போதே காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆலம்கீர் ஆலம் மற்றும் காங்கிரஸ் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் ஆர்.பி.என்.சிங் ஆகியோருக்கு தகவல் கொடுத்தேன். இது குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும் தெரிவித்தேன். என்னையும் மற்ற எம்.எல்.ஏக்களையும் அணுகி வருகின்றனர். அந்த நபர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களா என்றால் உறுதியாக தெரியவில்லை, ஆனால் அவர்களில் சிலர் ஒரு சில பாஜக உறுப்பினர்களை பெயரிட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாக மூன்று பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இப்படியொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

click me!