ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சசிகலாவுக்கு எதிராக பொங்கிய அதிமுகவினர்... தொடரும் கண்டன தீர்மானங்கள்...!

Published : Jun 17, 2021, 10:10 PM IST
ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சசிகலாவுக்கு எதிராக பொங்கிய அதிமுகவினர்... தொடரும் கண்டன தீர்மானங்கள்...!

சுருக்கம்

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று மதுரை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

சசிகலாவுக்கு எதிராக மாவட்ட அளவிலான கூட்டங்களில் அதிமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். சேலம். விழுப்புரம் மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அதிமுக சார்பிலும் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாங்கள் வருமாறு:
1. சூழ்ச்சிகள் , தந்திரங்கள் , சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து , மக்களின் பேரன்பைப் பெற்று 75 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர் அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
2. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக , அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள முயல்கிறார். ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்க வேண்டும்.


3. அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் , இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோன்ற தீர்மானம் திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடந்த கூட்டத்திலும் நிறைவேற்றப்பட்டது.
 

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?