அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்துச்சு.. இப்போ எல்லாமே திமுக ரவுடியிசம் - கொந்தளிக்கும் ஜெயக்குமார் !

By Raghupati RFirst Published Aug 15, 2022, 6:22 PM IST
Highlights

தற்போதைய ஆளும் கட்சியினரால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தன்னுடைய துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மக்களின் உயிரைக் காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறையை கடந்த 14 மாத காலமாக, தனது தற்குறி நிர்வாகத்தால் கோமா நிலைக்குக் கொண்டு சென்ற, மா.சு. என்று ஆளும் கட்சியினரால் அன்போடு (?) அழைக்கப்படும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், எங்களுடைய கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான, அண்ணன் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மீது அறிக்கை என்ற பெயரில் ஊளையிட்டிருக்கிறார்.

மக்கள் நலப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினை விட, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள், சுமார் நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி நடத்தியவர் என்பதால் அரசுக்கு வழிகாட்டுகிறார். இதுவே எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமை ஆகும்.

மேலும் செய்திகளுக்கு..“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !

பிரச்சினைகளைத் தீர்க்கத் திணறி ஆலோசனை நடத்துவதிலும், குழு அமைப்பதிலும் காலம் கடத்திவரும் விடியா திமுக அரசு, பற்றி எரியும் போதைப் பொருள் பயன்பாட்டால் கதறிக் கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைக்கு வழி தெரியாமல் பாதிக்கப்பட்டவர்களிடமே கருத்து கேட்பது, ஆட்சி நடத்தத் துப்பில்லை என்பதையே காட்டுகிறது. மாணவச் செல்வங்களும், இளைஞர்களும் சீரழிவதை அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் சுட்டிக் காட்டியதைத் தாங்க முடியாமல் மா.சு. புலம்பி இருக்கிறார்.

தற்போதைய ஆளும் கட்சியினரால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதை அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் மக்கள் மத்தியில் எடுத்து வைத்த ஆத்திரத்தில், ஒரு குடும்பத்திற்கு கொத்தடிமையாக சேவகம் செய்யும் இந்த விடியா அரசின் அமைச்சர் மா.சு. ஊளையிட்டுப் பார்க்கிறார். தி.மு.க. ஆட்சி மக்களின் நல்வாழ்வுக்கு, அமைதிக்கு கொள்ளி வைத்துவிட்டு, வெறும் புள்ளி விவரங்களால் பதில் சொல்லி வாயை அடைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். 

மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. திமுகவை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை!

அ.தி.மு.க. ஆட்சி என்றால், மக்களுக்கு இன்னல்கள் இன்றி, சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் அடங்கி, அமைதி தவழும். தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் மட்டுமே நிலைக்கும் என்பது கட்சி வேறுபாடின்றி பொது மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை ஆகும். மீதியிருக்கின்ற ஆண்டுகளாவது சட்டத்தின் ஆட்சி நடத்த மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மக்களை காக்கும் அறப்போரில் அறம் காத்த முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.  இந்த வேள்வியில் வெற்றி பெறும் வரை, அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் அணிவகுத்து நிற்பார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசும், அதன் அமைச்சர்களும், எதிர்கட்சிகளுக்கு எதிராக நீண்ட அறிக்கையை கொடுப்பதற்கு பதில், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும். தமது திறமையின்மையை மறைக்க எதிர்கட்சிகளை குறை சொல்லும், மறைந்த கருணாநிதியின் மாடல் அரசு திருந்த, ஒரு வாய்ப்பு அளித்த மக்களை மீண்டும் வேதனையில் தள்ள வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?

click me!