போலீசாருக்கு 10 புல்லட் பைக் வாங்கிக் கொடுத்த ரவுடி... ஒத்தாசையாக இருந்தவர்களுக்கு ஜாக்பாட்..!

Published : Jul 09, 2021, 12:23 PM IST
போலீசாருக்கு 10 புல்லட் பைக் வாங்கிக் கொடுத்த ரவுடி... ஒத்தாசையாக இருந்தவர்களுக்கு ஜாக்பாட்..!

சுருக்கம்

மனைவியை விடுவிக்க தனிப்படையில் இருந்த 10 போலீசாருக்கும் சாமி ரவி புல்லட் பைக் வாங்கி தந்து இருக்கிறார். 

தேர்தல் நேரத்தில் திருச்சி, பெட்டவாய்த்தலை அருகே அ.தி.மு.க., வேட்பாளர்கள் செலவுக்கு கொண்டு சென்ற 2 கோடி ரூபாயை கொள்ளையடித்த வழக்கில், பிரபல ரவுடி சாமி ரவியை போலீசார் கைது செய்திருந்தனர்.

 

ரவுடி சாமி ரவியை சமீபத்தில் கஸ்டடியில் எடுத்து விஜாரணை நடத்தினார்கள். அப்போது பல தகவல்களை கொட்டியிருக்கிறார். ஒரு வருஷத்துக்கு முன்பு ஒரு கடத்தல் வழக்கில் சாமி ரவி தலைமறைவாகவே, அவரது மனைவியை போலீசார் விஜாரணைக்கு அழைத்து சென்று விட்டனர். அப்போது மனைவியை விடுவிக்க தனிப்படையில் இருந்த 10 போலீசாருக்கும் சாமி ரவி புல்லட் பைக் வாங்கி தந்து இருக்கிறார். 

அதுவும் இல்லாமல், தனக்கு ஒத்தாசையாக இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு, திருச்சி கே.கே.நகர் சொகுசு பங்களாவில் 'குட்டி, புட்டி'களை சப்ளை செய்ததாகவும் புட்டு புட்டு வைத்திருக்கிறார். இதனால், சாமி ரவியிடம் கைநீட்டிய போலீசார் பலரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். 
 

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!