மத்திய அமைச்சர் எல்.முருகன் எந்த மாநிலத்தில் இருந்து எம்.பி.,யாகப் போகிறார் தெரியுமா..?

By Thiraviaraj RMFirst Published Jul 9, 2021, 11:46 AM IST
Highlights

மத்திய அமைச்சரான பின்னர் ஆறு மாத காலத்திற்குள் எம்.பி.-ஆக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். இதில், எல். முருகன் எந்த மாநிலத்தில் இருந்து எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே அடுத்த கேள்வியாக உள்ளது.

மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய அமைச்சரான பின்னர் ஆறு மாத காலத்திற்குள் எம்.பி.-ஆக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். இதில், எல். முருகன் எந்த மாநிலத்தில் இருந்து எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே அடுத்த கேள்வியாக உள்ளது.

தற்போதைய சூழலில் தமிழ்நாடு எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும் திமுக கைப்பற்றவே வாய்ப்பு இருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிப்பதால், எல்.முருகன் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அறவே கிடையாது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு காலி ஆகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களில் திமுக 4, அதிமுக 2 என்ற எண்ணிக்கையில் கைப்பற்றக்கூடும். ஆனால், தற்போதைக்கு திமுகவிற்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

புதுச்சேரியில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. பாஜகவிற்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்கள், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் என 12 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு உள்ளது. அதேபோல், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு புதுச்சேரியில் அதிமுக சார்பில், என்.ஆர். காங்கிரஸ் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் எம்.பி.-யின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், எல்.முருகன் புதுச்சேரியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நலத்துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட், தற்போது கர்நாடக மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தனது எம்.பி., பதவி ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்துள்ளார். அதை வெங்கையா நாயுடு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஒரு காலியிடம் உருவாகும். இதன்மூலம், எல்.முருகனை மாநிலங்களவை உறுப்பினராக அமர வைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. பிரதமர் மோடியின் முடிவே இறுதியானது என்பதால், எல். முருகனை எங்கிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளனர். அதேபோல் மத்தியப்பிரதேச பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இல.கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், எல்.முருகன் பாஜக ஆளும் வேறு மாநிலத்தில் இருந்து எம்.பி.,ஆவது உறுதியாகியுள்ளது.  ஆறு மாதம்மேற்கு வங்கத்திலும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மம்தா பானர்ஜி, ஆறு மாத காலத்திற்குள் எம்.எல்.ஏ.,ஆக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, சட்டப்பேரவை தேர்தலிலேயே தேர்தல் ஆணையத்தின் மீது மம்தா கடுமையாக குற்றம் சுமத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுப் பரவல் காரணத்தினால் இடைத்தேர்தல் குறித்தும் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதனால், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மேற்கு வங்கத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரும் தீர்மானத்தைச் சட்டப்பேரைவயில் நிறைவேற்றி, ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. மீண்டும் சட்டமேலவை வரும்பட்சத்தில், இடைத்தேர்தல் நடத்தாவிட்டாலும் மம்தா முதலமைச்சராக நீடிக்க முடியும் என்பது கூடுதல் தகவல். மேலும், மாநிலங்களவைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமும் ஒருபுறம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
 

click me!