எங்க ’தல’யை தொட்டா... இதான் கதி - அரசு பஸ்ஸை எரித்து எலும்புகூடாக்கிய ராக்கெட் கேங்

Asianet News Tamil  
Published : May 15, 2018, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
எங்க ’தல’யை தொட்டா...  இதான் கதி - அரசு பஸ்ஸை எரித்து எலும்புகூடாக்கிய ராக்கெட் கேங்

சுருக்கம்

rocket raja arrest issue

ரவுடி ராக்கெட் ராஜா  திசையன்விளை அருகில் உள்ள ஆனைக்குடியைச்  சேர்ந்தவர்.  கராத்தே செல்வினைக் கொலைசெய்த கட்டத்துரையைக் கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராக்கெட் ராஜா, கைது செய்யப்பட்டு அந்த வழக்கிலிருந்து விடுதலையானார்.

இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. சாதிரீதியான பல்வேறு புகார்கள் இவர்மீது வந்துள்ளன. ஆனால் அவையாவும் போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் ராக்கெட் ராஜா காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தே வந்துள்ளார்.

இந்நிலையில் மே மாதம் 8ந்தேதி சென்னை துணை ஆணையர் அரவிந்தன் தலைமையிலான குழு துப்பாக்கி முனையில் ராக்கெட் ராஜாவை கைது செய்தது. பின் அவரை விருகப்பாக்கம் போலீஸ் ஸ்டேசனில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி 14 நாட்கள் ரிமாண்ட் செய்து புழல் சிறைக்கு அனுப்பியது. ராக்கெட் ராஜாவை விடுதலை செய்யக்கோரி ’நாடார் மக்கள் சக்தி’ போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்தில் அரசு பேருந்திற்கு தீ வைப்பு, ராக்கெட் ராஜா கைதைக் கண்டித்து மர்ம நபரக்ள் தீ வைத்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!