
சீக்கிரமா வந்து ஆட்சி அமைங்க அப்படியே எங்களுக்கு சேரவேண்டிய நீரை திறந்து விடுங்கள் என எடியூரப்பாவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளோடு கோரிக்கையும் வைத்துள்ளார்.
கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பாஜக முன்னிலை வகித்தது. இதுவரை வெளியான தேர்தல் முடிவில் பாஜக 112 இடங்களிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், மஜத 38 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கவிருக்கும் எடியுரப்பாவிற்கு திமுக செய்யல தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாவது; கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள்.
புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். #KaranatakaVerdict என பதிவிட்டுள்ளார்.