வெற்றி கொண்டாட்டத்தில் கல்லா கட்டும் பா,ஜ,க அலுவலகம் ... வெறிச்சோடியது தமிழக காங்கிரஸ் அலுவலகம்

First Published May 15, 2018, 1:05 PM IST
Highlights
karnataka election celebration in t nagar


கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது வாக்கு எண்ணிக்கை நொடிக்கு நொடி பரபரப்பான மாற்றத்துடன் சென்றது.

தொடக்கத்தில் கடலோர கர்நாடகத்தில் பா.ஜ.கவும் வட கர்நாடகத்தில் காங்கிரஸும் முன்னிலையில் இருந்தது. தற்போது பா.ஜ.க 119 இடங்களிலும் காங்கிரஸ் 57 இடங்களிலும் மஜத 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

112 தொகுதியில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையை பெறும் என்கிற அளவில் இருந்த பா.ஜ.க தற்போது 119 இடங்களை பெற்று தன் வாக்கு எண்ணிக்கையில் கல்லா கட்டி வருகிறது.

யாருடைய தயவும் இன்றி நாங்கள் வெல்வோம், ஆட்சியமைப்போம் என மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க அலுவலகம் தொண்டர்கள் நிரம்பி வழிய கலை கட்டத் தொடங்கியுள்ளது.

பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டம் என தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

தமிழக பா.ஜ.க தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்கள், இதில் பேசிய  தமிழிசை செளந்தர்ராஜன் வெற்றியை பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் சமர்பிப்பதாக கூறினார், மேலும் தென்னிந்தியாவின் முதல் வெற்றியாக கர்நாடாக மாநிலம் அமைந்துள்ளது.

எச்.ராஜா அவர்கள் இந்துக்களின் பெரும்பான்மையாக இருக்கும் லிங்காயத்துக்கள் மக்களை சிறுபான்மை எனக்கூறி செய்த அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் கற்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் காவிரி நீர் நிச்சயம் தமிழகத்துக்கு கிடைக்கும் என்றார்.

தென்னிந்தியாவில் முதன் முறையாக பா.ஜ.க ஆட்சியை தனிப்பெரும்பாண்மையுடன் பெற்றுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய வரி விதிப்பினால் பா.ஜ.க தோல்வியடையும் என கணித்த கருத்துகணிப்புகள் யாவையும் இந்த வெற்றி சுக்கு நூறாய் உடைத்துள்ளது. 

 

click me!