
சாமுண்டீஸ்வரி தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் ஜி.டி.தேவகௌடாவிடம் சித்தராமையா தோல்வியை தழுவினார்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.கே.நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 40 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக 112 தொகுதிகளிலும் காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளிலும் மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சித்தராமையா, சாமுண்டீஸ்வரி மற்றும் பதாமி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தொடக்கம் முதலே சித்தராமையாவை விட அதிக வாக்குகள் முன்னிலை வகித்து மஜத வேட்பாளர் ஜி.டி.தேவகௌடா, 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சித்தராமையாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஆனால், பதாமி தொகுதியில் சித்தராமையா முன்னிலை வகித்துவருகிறார்.