
கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை ஒட்டி பா.ஜ.க அலுவலகத்தில் ராஜ்ய சபா எம்.பி ராஜூவ் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான சித்தராமையாவின் ஆட்சி ஊழல் மலிந்ததாகவும் மதம், சாதி அடிப்படையிலான பிரிவினைவாதத்தை தூண்டும் ஆட்சியாக இருந்து வந்து. மக்கள் ஆட்சியை விரும்பவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.
ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரத்திலும் மக்கள் விரும்பும் மாற்றத்தையே அவர்களுக்கு கொடுப்பதாக பா.ஜ.க பிரச்சாரம் செய்து வந்தது. மக்களின் வாக்கு மாற்றத்தை விரும்பி பா.ஜ.கவை வெற்றியடைச் செய்துள்ளது என்றார்.
தற்போது சித்தராமையா தன் மூட்டை முடிச்சுகளை கட்டத் துவங்கலாம் அரசியல் இல்லாமல் வேறு வேலையை கண்டு அடையும் நேரம் வந்துவிட்டது என்றார். சித்தராமையா ஆட்சி முற்றிலும் மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.
பா.ஜ.கவின் ஆட்சி மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியது, அனைவரும் சம்மான வாய்ப்பை பெற்றுத் தரக்கூடியது. சாதி,மத அடிப்படையில் மக்களை வேற்றுமைபடுத்தும் சித்தராமையாவின் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை.
யாருடமும் கூட்டணி வைக்கும் அவசியம் பா.ஜ.கவுக்கு அவசியம் இல்லை தனிப்பொரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நாங்கள் எதிர்பார்த்த்தையே கர்நாடக மக்கள் எங்கள் வழங்கியுள்ளனர்.
கர்நாடக அரசு அமைந்ததும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் மக்களுக்கு நிறைவேற்றுவோம் எனக் கூறினார்