காங்கிரஸ் இல்லாத இந்தியா.. இலக்கை நோக்கி நகரும் பாஜக!! பாஜக ஆளும் மாநிலங்கள் எத்தனை தெரியுமா?

 
Published : May 15, 2018, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
காங்கிரஸ் இல்லாத இந்தியா.. இலக்கை நோக்கி நகரும் பாஜக!! பாஜக ஆளும் மாநிலங்கள் எத்தனை தெரியுமா?

சுருக்கம்

bjp is moving towards its target

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை பிடித்து வருகிறது பாஜக. கடந்த ஓராண்டில் தேர்தல் நடந்த உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் தனித்தோ அல்லது கூட்டணியிடனோ ஆட்சியமைத்துள்ளது. 

தற்போது காங்கிரஸின் வசம் இருந்த கர்நாடகாவிலும் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இதுவரை பாஜக தனித்து ஆளும் மற்றும் ஆளும் கூட்டணியில் இருக்கும் மாநிலங்களின் பட்டியலை பார்ப்போம்.

பாஜக தனித்து ஆளும் மாநிலங்கள்:

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்களிலும் பாஜக தனித்து ஆட்சி நடத்துகிறது. தற்போது கர்நாடகாவில் ஆட்சியமைக்க உள்ளது. 

ஆளும் கூட்டணியில் பாஜக இருக்கும் மாநிலங்கள்:

மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், கோவா, ஜம்மு காஷ்மீர், பீகார், சிக்கிம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டது. 

கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் பாஜக தனித்தோ அல்லது கூட்டணியுடனோ ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே பாஜகவைத் தவிர மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களாக உள்ளன.

இவற்றில் பஞ்சாப் மற்றும் மிசோரமில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!