
கர்நாடகா சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா? குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவோடு அரியாசனத்தில் அமர்வார்களா என்ற நிலையில் காங்கிரசின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. குமாரசாமியின் கட்சி 44 தொகுதிகளுக்கு மேல் லீடிங்கில் உள்ளது. இதனால் அரியாசனத்தை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார் குமாரசாமி கட்சி இருந்தது. குமாரசாமியின் கட்சியை தவிர்த்துவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என கருத்துக் கணிப்பு வெளியாகி இருந்தாலும் தற்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க கிங்காக மாறியிருக்கிறார் எடியுரப்பா.
கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.
மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமய்யா பின்னடைவை சந்தித்துள்ளார். பதாமி தொகுதியில் குறைந்த வாக்குகளிலே முன்னிலையில் வக்கிக்கிறார். முதலில் இரு கட்சிகளும் சம பலத்துடன் மோதிவந்த நிலையில், 9.30 மணி நிலவரப்படி, பாஜக 119 தொகுதிகளிலும், காங்கிரஸ் 57 தொகுதிகளிலும், குமாரசாமி கட்சி 44 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
222 தொகுதிகளில்தான் தேர்தல் நடைபெற்றது என்பதால் பாஜக, 119 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மை பெற்றுவிடலாம். மஜதவை பொறுத்தளவில் அது காங்கிரசின் ஓட்டை தான் சிதைத்தது. சுமார் தொகுதிகளில் மஜத முன்னிலையில் உள்ளது. டிரெண்ட் இதுபோல 119 தொகுதிகளில் லீடிங்கில் உள்ளதால், கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும், பிந்தைய கருத்து கணிப்புகளிலும் தொங்கு சட்டசபை அமையும் என்றும் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்பு வெளியான நிலையில் அதுபோல், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
எனவே தேவெ கெளடா மற்றும் குமாரசாமி கை காட்டும் நபர்தான் முதல்வராக முடியும் என்ற நிலையில், தற்போது ௧௧௪ தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவின் எடியூரப்பா நாளைய மறுநாள் (17-ஆம் தேதி) பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்திருக்கிறார். ஆக கிங் மேக்கர் தான் குமாரசாமி என கருத்துக் கணிப்ப்ளிருந்து மாறி நாங்களே கிங் தான் என பாஜக நிருபித்துள்ளது!