
தமிழக சட்டப்பேரவை மே 29 ஆம் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 29 ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். துறை வாரியான ஆய்வுக் கூட்டங்கள் முதலமைச்ச்ர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
துறைவாரியான ஆய்வுக் கூட்டங்கள் 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் 29 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் 30 நாட்களில் இருந்து 40 நாட்கள் வரை நடைபெறும் என்றும் தெரிகிறது.