
கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.
மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது வாக்கு எண்ணிக்கை நொடிக்கு நொடி பரபரப்பான மாற்றத்துடன் சென்றது.
இந்நிலையில் கடலோர கர்நாடாகவில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ளது. சாமூண்டீஸ்வரி தொகுதியில் 13,730 வாக்குகள் எண்ணிக்கையில் சித்தாராமையா பின்னடைவு
இந்நிலையில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம் என சதானந்தா கவுடா கூறியுள்ளார். 112 தொகுதியில் தற்போது முன்னிலையில் பா.ஜ.க இருப்பதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம், எங்களுக்கு யார் ஆதரவு தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடியுள்ளது. தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகம் கமலாலயத்தில் பத்திரிகையாளர்கள் கூடியுள்ளனர்.