தமிழகத்தை சீரழித்த எடப்பாடியே..திருப்பதியில் பழனிசாமியை பதறவைத்த பக்தர்! சாமி தரிசனம் செய்தவரை சரமாரியாக திட்டியதால் பரபரப்பு...

 |  First Published May 15, 2018, 11:35 AM IST
TN CM Edappadi Palanisamy at Tirupati temple



திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  தமிழகத்தை சீரழித்த எடப்பாடியே என பக்தர் ஒருவர் சாமியாடி திட்டி தீர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. நேற்றிரவு திருமலை மாடவீதியில் உள்ள வாரகசாமி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு அருகில் உள்ள லக்‌ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு அவர் சென்றார்.

அங்கு தரிசனம் செய்து கொண்டிருந்தபோது அருகில் அர்ச்சகர் போன்ற தோற்றத்தில் இருந்த பக்தர் ஒருவர் தன் மீது சாமி வந்துவிட்டதாக உணர்ந்து ஆவேசமாக கூச்சலிட்டார். அப்போது தமிழகத்தை சீரழித்த எடப்படியே, நீ உடனே என்னைவந்து பார்க்க வேண்டும் என அழைப்பு விடுத்த பக்தரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.

இது போன்ற சம்பவத்தை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமியும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் விசாரணையில் எடப்பாடிக்கு எதிராக ஆவேசம் அடைந்த பக்தர், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராமலு என்பது தெரியவந்துள்ளது.

எடப்பாடியை அதிரவைத்த ஸ்ரீராமலுவை சம்பரதாய விசாரணைக்கு பின் போலீசார் அவரை விடுவித்தனர். அவரது செயலை பாராட்டி தரிசனத்துக்கு வந்த சக தமிழக பக்தர்கள் கை கொடுத்து வாழ்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. எடப்பாடி பழனிசாமியை சாமியாக சித்தரித்து தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட விளம்பர படங்கள் வெளியாகி சர்ச்சை உருவானது.

இந்த நிலையில் நான் தான் சாமி, எடப்பாடி தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று திருப்பதியில் பக்தர் ஒருவர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

click me!