
மோசமாக தோற்றாலும் கர்நாடக மாநில தேர்தலில் 37.4 சதவீத ஓட்டுகளை பெற்று காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் உள்ளது. 37,2 சதவீத வாக்குகளை பாஜகவும், 18.1 சதவீத வாக்குகளை மதச்சார்பற்ற ஜனதா தளமும் பெற்றுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றிருந்தாலும், போகப் போக பாஜகவின் கை ஓங்கத் தொடங்கியது.
தற்போது அறுதிப்பெருப்பான்மைக்கான 113 இடங்களை பாஜக ஏறத்தாழ கைப்பற்றிவிட்டது என்றே சொல்லாம்.
தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 112 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. . தற்போது ஆட்சி அமைக்கத் தேவையான 113 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 68 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை இழந்து விட்டது. தற்போது பாஞ்சாப், பாண்டிச்சேரி மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவை காங்கிரஸ் இழந்துள்ளது.
இத்தனை ரண களத்திலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அதிக அளவு வாக்குளை பெற்றுள்ளது. இன்று எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் கட்சி 37.4 சதவீத ஓட்டுகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. 37,2 சதவீத வாக்குளை பாஜகவும், 18.1 சதவீத வாக்குகளை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் தற்போது இதை மட்டும் பெருமையாக பேசிக் கொள்ளலாம்.