
திராவிடம் தொடர்பான ஆளுநர் பேச்சு திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.ஏன்.ரவி;- வட இந்தியாவிலிருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை. இங்கே இருந்தும் அறிவை வளர்க்க காசி போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் இருந்தோம். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கியிருந்தோம். ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள்.
வரலாற்றை இன்னும் உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும் தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள் என்று கூறினார். இதற்கு திமுக தரப்பில் டி.ஆர்.பாலு காட்டமான பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல், திருமாவளவனும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் அவங்க இறங்கிட்டாங்க.. இது தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல.. அலறும் திருமா.!
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திராவிடன் என்பது மரபினம் அல்ல; நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்கிறார் ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி அவர்கள். இதுதான் திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு. திராவிடன் என்பது மொழிவழி தேசிய இனம் அல்ல. ஆனால் அது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை.
இதையும் படிங்க;- கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் மீண்டும் திமுகவில் இணைப்பு.. ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு..
திராவிடன் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம்சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர்எஸ்எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.