ஆளுநர் மாளிகை நிதி செலவில் முறைகேடா.?அப்பட்டமான பொய்; திராவிட மாடல் காலாவதியானது: இறங்கி அடிக்கும் ஆர்.என்.ரவி

By Ajmal Khan  |  First Published May 4, 2023, 8:18 AM IST

திராவிட மாடல் என்பது அரசியல் வாசகம் மட்டுமே, காலவதியான சித்தாந்தத்தை  புதுப்பிக்க வைக்கும் முழக்கமே திராவிட மாடல் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.


ஆளுநர்- தமிழக அரசு மோதல்

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதில் தொடங்கிய பிரச்சனை இன்னும் நீடித்து வருகிறது. மேலும் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொது நிகழ்வில் பேசுவது, திராவிட மாடலை விமர்சிப்பது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மாணவர்களிடம் கூறுவது என அடுத்தடுத்து தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பேசி மோதல் முற்றியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக சட்டபையில் திராவிட மாடல், பெரியார், அண்ணா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் உரையில் பேச மறுத்தார். இதன் காரணமாக ஆளுநர் முன்னிலையிலேயே முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து அதிரடி காட்டினார். 

Tap to resize

Latest Videos

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

மேலும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது தமிழக சட்டமன்றத்தில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர், ஆளுநர் மாளிகைக்கு தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொடுக்கப்படக்கூடிய நிதியானது 50 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து திடீரென 2019ஆம் ஆண்டு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும், அந்த 5 கோடி ரூபாயில் 4 கோடி ரூபாய் தனிப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்பட்டதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார் .5 கோடி ரூபாய் அரசு பணத்தை எப்படி தனியார் நிறுவனத்திற்கு வழங்கினார்கள் என்றும் ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதுதானா  என்பதை விளக்க வேண்டும் என அமைச்சர் பிடிஆர் கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்பட்டமான பொய்

இந்தநிலையில் ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ரவி பேட்டியளித்துள்ளார். அதில் திராவிட மாடல் என்பது அரசியல் வாசகம் மட்டுமே, காலவதியான சித்தாந்தத்தை  புதுப்பிக்க வைக்கும் முழக்கமே திராவிட மாடல் என கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடலின் நோக்கம் எனவும கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் மாளிகையில் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறிய குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், இது அப்பட்டமான பொய் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

மாய வலைக்குள் சிக்கிகொண்ட கழகம்! ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவன் உருவாகணும்! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆவேச பதிவு.!

 

click me!