மாய வலைக்குள் சிக்கிகொண்ட கழகம்! ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவன் உருவாகணும்! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆவேச பதிவு.!

By vinoth kumar  |  First Published May 4, 2023, 6:44 AM IST

நமது இரு பெரும் தலைவர்களின் கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் கடைப்பிடித்து அவர்களது கனவுகளை உயிர்ப்பிக்கும் வகையிலும்  கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முக்கிய தலைவர்களின் கட்டளையை செயல்படுத்தும் விதமாக மட்டும்  பதிவுகள்  வரவேண்டும்.


மீண்டும் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று தமிழகத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே நமது லட்சியம் என ஜெயபிரதீப் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். சட்டப்போராட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றினார். இது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவன் உருவாக வேண்டும் ஜெயபிரதீப் கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கருணாநிதி ஆட்சி கால அரசாணையையே நிறைவேற்றாத ஸ்டாலின்.! தேர்தல் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்.? ஓபிஎஸ்

இதுதொடர்பாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் பதவி, பணம் ஆகிய மாய வலைக்குள் சிக்குண்டு இருக்கும் நமது கழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

நமது இரு பெரும் தலைவர்களின் கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் கடைப்பிடித்து அவர்களது கனவுகளை உயிர்ப்பிக்கும் வகையிலும்  கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முக்கிய தலைவர்களின் கட்டளையை செயல்படுத்தும் விதமாக மட்டும்  பதிவுகள்  வரவேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் வளர்ச்சி பணிகள், தொண்டர்களை ஊக்குவிக்கும் பணிகள், கழக நிர்வாகிகளின் உத்தரவை நிறைவேற்றும் வகையிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க;-  கோவையில் போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி? ஊழலுக்கு துணை போன அதிகாரிகள்! என்ன செய்ய போகிறார் முதல்வர்? டிடிவி

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவன் உருவாக வேண்டும். மீண்டும் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று தமிழகத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே நமது லட்சியம். அதை நோக்கியே நமது பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் அதில் உங்களில் ஒருவனாக நானும் பயணிப்பேன் என்பதை  அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் என்று ஜெயபிரதீப் கூறியுள்ளார். 

click me!