
ஆர்.கே.நகர் மக்கள் குறைகளை தீர்ப்பதற்காக http://www.rknagar.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
இதைதொடர்ந்து பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்படும் இடங்களில் தேவைக்கு ஏற்ப வருமான வரித்துறை குழுக்கள் அனுப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் மக்கள் குறைகளை தீர்ப்பதற்காக http://www.rknagar.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆர்.கே.நகர் மக்கள் இந்த இணைதளத்தில் சென்று அந்த தொகுதி குறித்த புகார்களை தெரிவித்தால் அதற்கு உடனடியாக தீர்வு கிடைக்கப்பெறும் என மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.