
ஆர்,கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்…ஓபிஎஸ் அணி வேட்பாளர் நாளை அறிவிப்பு…
ஜெயலலிதா மறைவால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்லில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் அணியினர் அறிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மரணமடைந்தததையடுத்து அவரது தொகுதியான ஆர்,கே.நகரில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து திமுக, அதிமுகவின் 2 பிரிவுகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. திமுக இன்று தனது வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதிமுகவில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை: வீனஸ் காலனியில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், உண்மையான அதிமுக என்பது ஓபிஎஸ் தலைமையில் இயங்கும் இயக்கமே என தெரிவித்தார்.
சசிகலா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றும் பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து நாளை முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று பாண்டியராஜன் தெரிவித்தார்.