
ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏவான, டிடிவி தினகரன், இன்று நேதாஜி நகரில் அமைந்துள்ள முருகன் கோவிலில் வழிபாடு நடத்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்றார். இதையறிந்த அந்த பகுதி மக்கள் முருகன் கோவில் முன்பு திரண்டனர்.
பின் இடைத்தேர்தலின் போது, ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் கொடுப்பதாக சொல்லி 20 ரூபாய் கொடுத்து டோக்கன் போடப்பட்ட நோட்டுகளை காண்பித்து சதத்மிட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு உடனடியாக வந்த போலீசார், பொது மக்களை சமாதனம் செய்து அங்கிருந்து செல்லும் படி கேட்டுக்கொண்டனர். மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால், தண்ணீர் பந்தலை திறந்து வைக்க வந்த டிடிவி தினகரன் மாற்று பாதையில் புறப்பட்டு சென்றார்.