
திவாகரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் கோவில் திருவிழாவுக்கு சென்ற அந்த தொகுதி MLA தினகரனுக்கு தொகுதி மக்கள் ரூ.20 நோட்டை கையில் வைத்துக்கொண்டு தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது ஓட்டுக்கு ரூ.10000 தருவதாக கூறி ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து வாக்குக் கேட்டதாக செய்தி வெளியானது.
சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது அந்த தொகுதி விழாவுக்கு சென்ற சமயத்தில் ரூ.20 நோட்டு இங்கே, ரூ.10000 எங்கே? என்று பொதுமக்கள் கோஷம் எழுப்பியதால் காவல் துறையினர் தினகரனை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ஆர்கே நகரில் 20 ரூபாய் நோட்டுக்கு பணம் தருவோம் என நாங்கள் யாரும் கூறவில்லை என்றார். மதுசூதனன் தரப்பினர் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை செட் அப் செய்து இதுபோன்று செய்வதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து திவாகரன் தனிக்கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், திவாகரனுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றார். திவாகரன் கூறுவதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை எல்லாமே சுத்தப் பொய் என தினகரன் கூறினார்.
மேலும், திவாகரனுக்கு 2002ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றும், தற்போது அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திவாகரன் கோபத்தில் விரக்தியில் பேசுகிறார், அவருக்கெல்லாம் பதில் சொல்லிவ நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் தினகரன் கூறினார். அவர் யாருடைய தூண்டுதலில் செயல்படுகிறார் என்பது மக்களுக்கு விரைவில் தெரியும் என்று கூறினார்.