
ஆர்.கே.நகர் மக்கள் தினகரனை வலைவீசி தேடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்தியாவிலேயே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் மோசமான கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது திமுகதான். திருமங்கலம் ஃபார்முலாவை திமுக அறிமுகப்படுத்தியது. திமுகவை பின் தொடர்ந்து ஹவாலா ஃபார்முலாவை தினகரன் அறிமுகம் செய்துள்ளார்.
20 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக கொடுத்து 10000 ரூபாய் தருவதாக கூறி தினகரன் தற்காலிக வெற்றியை பெற்றிருக்கிறார். தினகரன் இன்னும் தொகுதி பக்கமே போகவில்லை. 10000 ரூபாய் தருவதாக கூறிவிட்டு இன்னும் தரப்படாததால், தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் தேடிவருகின்றனர் என ஜெயக்குமார் விமர்சித்தார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்தார்.