
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அவர் முற்றுப்புள்ள வைத்துள்ளார் என்றும் அவர் அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ, பாதகமோ ஏற்படாது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியிடவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துள்ள நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அப்போது ஸ்டாலினிடம், ரஜினியின் அரசியல் அறிவிப்பு, திமுகவுக்கு பின்னடைவை கொடுக்கும் என்ற நெட்டிசன்கள் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ரஜினி அரசியலுக்கு வருவதால், திமுகவுக்கு எந்த சாதகமோ பாதகமோ இல்லை என்று கூறினார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றும் ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறும்போது, ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும், அரசியலுக்கு வருவது அவரது விருப்பம் என்று கூறினார்.